ஒரு தலைப்பும் வேண்டாம் !!!

ஒன்னும் இல்லை ங்கிற தலைப்பையே எவ்வளோ நாள் பார்க்குறது ,
எரிச்சல் வருது. அது எதையோ அடிக்கடி ஞபாக படுத்துற மாதிரி (?)
வேற ஒரு பிரம்மை .ஒரு ரசிகையோட ஏக்கத்தை என்னோட favourite
writers யாருமே பூர்த்தி பண்றதே இல்லை. ஏன்பா ,எவ்வளவு நாள் தான் wait பண்றது ?
ஆர்த்தி , ஒரு கதையை ஆரம்பிச்ச அதுக்கு முடிவு ஒருவருஷம் கழிச்சுதான் எழுதிவியா ?இல்லை climax சரியா எழுதினா prize எதாவது கொடுப்பியா? இது ரெண்டும் இல்லைன்னணு bவைச்சுக்கோ , என் இஷ்டத்க்கு எதாவது எழுதி உன் கதைய ஒன்னும் இல்லாம பண்ணிருவேன். trail வேணுமா ,
உன் கதை ஹீரோ யாரு, ஆங் !! குரு ,அவனுக்கு தீடிர்னு accident ஆகி என் brain எடுத்து(?) என் நண்பனுக்கு வைச்சு இருங்கன்னு சொல்லிட்டு அந்த இடத்துலயே உயிரை விட்டுருவான்( senti climax) இது பிடிக்கலையா ,சரி விடு அடுத்ததை பார்போம் ,அடிகடி நண்பனை பார்க்க வரும்போது hospital receptionist கூட chemistry work out ஆகி ,இவங்க பாடுற duet பொறுக்க முடியாம ஜான் கோமால இருந்து எழுந்துர்ற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கவா ? ஏதாவது
ஒரு முடிவு சொல்லு ஆர்த்தி ,இல்லைன்னாலும் பரவாயில்லை ,கைவசம் நிறைய idea இருக்கு so இது எதுவுமே வேண்டாம்னா நல்ல பிள்ளையா கதைக்கு முடிவு எழுது !!!
பாலா ,நீ சிலிரிப்பு ,அரிப்பு வர்ற மாதிரி கவிதை ,கதை எழுதலைனாலும் பரவாயில்லை, கொஞ்சம் சிரிப்பு வர்ற மாதிரியாவது எழுதலாம்ல? அநியாத்துக்கு ரொம்ப நாள் யோசிக்கறப்பா(very bad) பாருங்க நீங்க எல்லாம் absent ஆனதாலா நான் எழுத வேண்டி இருக்குது (அப்பா!! முடியலை சாமி ,ஏண்டி எழுதுரன்னு கேள்விய avoid பண்ண என்ன எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்குது?)
இந்த பிறந்த நாளை (முப்பது வயசாச்சு!!) கொண்டாடும் விதமா ராவணன் படம் பார்க்க போனேன் . முப்பது வயசாச்சுன்னு கவலைய விட ஐயோ காசு போச்சேன்னு கவலைதான் ரொம்ப.அட ,சாமி ,ராமாயணத்தை வீட்டுலயே cd போட்டு பார்த்து இருக்கலாமோன்னு தோனுச்சு.அட ,ஊர்ல உலகத்தில நம்மளை யாரவது kidnap பண்ணினா ,"என்னை கொல்றதுக்கு நீ யாரு உனக்கு எந்த உரிமையும் கிடையாது " அப்படீன்னா டயலாக் பேசுவோம் ? சத்தியமா
நான் அப்படி இல்லைப்பா. எனக்கு கடைசிவரை அந்த சீதைக்கு ராமனை பிடிக்குதா இல்ல ராவணன் பிடிக்குதான்னு சந்தேகம் . இன்னும் தீரலை.ராவணன் இந்த வயசாகி போன(?) சீதாவை கடத்தறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் ..

ரெண்டு நாள் முன்னாடி நடந்த விஷயம் ,என் பொண்ணோட உக்கார்ந்து விளம்பரம் பார்த்துட்டு இருந்தேன் .அதுக்கு முன்னாடி உங்க எல்லோருக்கு ஒரு விஷயம்சொல்லிக்க ஆசை படுறேன் ,நானும் என் பொண்ணும் நாடகம் பார்க்கிறோமோ இல்லையோ விளம்பரம் பார்க்க மறந்ததே இல்லை. ஆனா ,சில விளம்பரம் பார்க்கும்போது கொஞ்சம் எரிச்சலா தான் வரும் அதுல ஒன்னு, இந்த recent close up விளம்பரம் .அட கண்றாவி!! பல் தேய்க்கிரதே
முத்தம் கொடுக்கத்தான் அப்படீன்னு ஒரு புது கண்டு பிடிப்பு (!) ஐயோ ,இந்த சனியனை எல்லாம் வர்ஷு பார்கிறாலேன்னு அந்த விளம்பரம் வரும்போது சேனல் மாத்திருவேன் .ரெண்டு தடவைதான்பா அப்படி பண்ணினேன். அப்புறும் அந்த விளம்பரம் வரும்போது என் மகளே remote கைல கொடுத்து அம்மா மாத்துன்னு சொல்றாப்பா (கடவுளே) எனக்கு என்னவோ பாக்கியராஜ் படம் நினைவுக்கு வந்துருச்சு.
போன வாரம் ரெண்டு பொம்மைய வைச்சு என் பொண்ணு விளையாண்டுட்டு இருந்தா . hasilli fissili பாட்டு வேற பாடிட்டு இருந்தா ,இதுல என்ன comedynna உயரமா இருக்கிற பொம்மை பேரு அனுஷ்கவாம் ,குட்டையா இருக்கிற பொம்மை பேரு சூர்யாவாம் ,ஐயோ பாவம் சூர்யா !!! அவளுக்கு கூட உண்மை புரிஞ்சு போச்சு !
சரி , வேற எழுத ஒன்னும் இல்லைப்பா, எதாவது சீக்கிரம் எழுத வழிய பாருங்க .அப்புறும் மதன் ,தீபா எல்லாம் கொஞ்ச நாளாவே ஒன்னும் எழுதலைல ,அதுனால ,அவங்க கிட்ட சொல்லியும் பெரிசா மாற்றம் வராதுன்னு நினைக்கிறேன் (?) இல்லை என் நினைப்பு தப்புன்னா எதாவது எழுதுங்கப்பா !!!
bye friends
மஹா

3 comments:

Balakumar Vijayaraman said...

என்ன student இப்போ தான் தூங்கி எழுந்து வந்திருக்கீங்க போல. :)

//இந்த வயசாகி போன(?) சீதாவை கடத்தறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் ..//

:) :) :)

//உயரமா இருக்கிற பொம்மை பேரு அனுஷ்கவாம் ,குட்டையா இருக்கிற பொம்மை பேரு சூர்யாவாம் !!!!//

nice observation :)

Anonymous said...

//அடிகடி நண்பனை பார்க்க வரும்போது hospital receptionist கூட chemistry work out ஆகி ,இவங்க பாடுற duet பொறுக்க முடியாம ஜான் கோமால இருந்து எழுந்துர்ற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கவா ?//

இது சூப்பரு .... :)

//அப்புறும் அந்த விளம்பரம் வரும்போது என் மகளே remote கைல கொடுத்து அம்மா மாத்துன்னு சொல்றாப்பா (கடவுளே) எனக்கு என்னவோ பாக்கியராஜ் படம் நினைவுக்கு வந்துருச்சு.//

அட !

-மதன்

Deepa said...

//நண்பனை பார்க்க வரும்போது hospital receptionist கூட chemistry work out ஆகி ,இவங்க பாடுற duet பொறுக்க முடியாம ஜான் கோமால இருந்து எழுந்துர்ற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கவா //

ஆர்த்தியோட கதைக்கு இப்படி ஒரு முடிவு வரப்போகுதுன்னு தெரிஞ்சிருந்தா, அவளே ஒரு கத்திய எடுத்து ஹீரோவ குத்தியிருப்பா :)

இதைக் கேட்ட பிறகாவது, ஆர்த்தி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..

//இதுல என்ன comedynna உயரமா இருக்கிற பொம்மை பேரு அனுஷ்கவாம் ,குட்டையா இருக்கிற பொம்மை பேரு சூர்யாவாம்//

உன்னோட effect வர்ஷா கிட்டயும் தெரியுது!!!

செம ஸ்வீட்... (இது வர்ஷாவுக்கு மட்டும் ;))

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்